மாமூல் கேட்டு தர மறுத்ததால் ஊழியர் மீது போதை இளைஞர்கள் சரமாரி தாக்குதல்..!
சென்னை பெரியமேடு பகுதியில், மதுபோதையில் இரண்டு இளைஞர்கள், பார்சல் சர்வீஸ் கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நேற்று முன் தினம் கடைக்கு லாரியில் வந்த பார்சல்களை ஊழியர்கள் இறக்கிக் கொண்டிருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த இருவர், மாமூல் கேட்டதாகவும், ஊழியர்கள் இல்லை என்று கூறியதால், இருவரும் அங்கிருந்த பார்சல்களை எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுத்த வடமாநில ஊழியரை இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஏற்கனவே ஒரு ஓட்டலில் தகராறு செய்ததால் சிறைக்கு சென்ற இந்த இளைஞர்கள், சிறையில் இருந்து வெளியே வந்து 5 நாட்களிலேயே மீண்டும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Comments