நவராத்திரி விழா : சிவன், மீனாட்சி அம்மன் கோவில்களில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம்...

0 2716

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 6-ஆம் நாளான நேற்று அம்பாள் மீனாட்சி, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளானமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நவராத்திரியையொட்டி தஞ்சை பெரியகோயிலில் அம்பாள் பிரகன்நாயகி, சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர். 

நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அம்பாள் பராசக்தி அம்மன், ஆண்டாள் அலங்காரத்திலும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் அம்பாள் பர்வதவர்த்தினி, சாரதாம்பிகை அலங்காரத்திலும், சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் உற்சவ வடிவுடையம்மன், உமா மகேஸ்வரி அலுங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments