பைக் விற்பனை டீலர் ஷிப் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவி கைது!

0 3595

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில், எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை டீலர் ஷிப் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

முனிகிருஷ்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ், அவரது மனைவி பாண்டி லட்சுமி இருவரும் கரையான்சாவடியில் பைக் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் மின்சார மோட்டார் பைக்கின் தூத்துக்குடி மாவட்ட டீலர் ஷிப் உரிமையை தூத்துக்குடி கார்டுவெல் காலனியைச் சேர்ந்த நிமேஷ் எட்வின்னுக்கு கொடுப்பதாக கூறி 25 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.

டீலர்ஷிப் உரிமையை எட்வினுக்கு கொடுக்காததால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவருக்கு 8 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு பாக்கி பணம் 17 லட்சத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

எட்வின் அளித்த புகாரையடுத்து மோசடி தம்பதியரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments