களைகட்டிய துர்க்கை பூஜை.. இந்துக்களுடன் மத நல்லிணக்க அடையாளமாக பூஜையில் பங்கேற்ற முஸ்லீம்கள்
நவராத்திரி விழாவின் 5வது நாளான நேற்று கொல்கத்தாவில் துர்க்கை பூஜை களை கட்டியது.
கொல்கத்தா துர்க்கை பூஜைக்கு பிரசித்தி பெற்றது. நவராத்திரியை முன்னிட்டு நேற்று ஒரு மெட்ரிக் டன் எடை கொண்ட 11 அடி உயரம் உள்ள அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர், வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. மதநல்லிணக்கத்தின் அடையாளமாக கொல்கத்தாவில் உள்ள முஸ்லீம்கள் சார்பில் துர்க்கை பூஜை நடைபெற்றது. இதில் திரளாக இந்துக்களுடன் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர்.
இதனிடையே ஒடிசாவின் கட்டாக் நகரில் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளி மற்றும் தங்க இழைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 28 துர்க்கை சிலைகளுடன் பூஜை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Comments