செப்டம்பர் மாதத்தில் யுபிஐ தளம் மூலம் 678 கோடி மின்னணுப் பணப் பணப்பரிமாற்றங்கள்.. தேசிய பரிவர்த்தனை கழகம் அறிக்கை!

0 2609

செப்டம்பர் மாதத்தில் யுபிஐ தளம் மூலம் 678 கோடி மின்னணுப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை செப்டம்பர் மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்து 11 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஐஎம்பிஎஸ் சேவை மூலம் வங்கிகள் இடையிலான உடனடி பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் அடிப்படையிலான ஏஇபிஎஸ் பரிவர்த்தனைகள் செப்டம்பரில் சற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments