முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.!

0 3267

சென்னை பேசின்பாலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியந்தோப்பு காந்திநகரைச் சேர்ந்த சேட்டு என்கிற கார்த்திகேயன், காந்தி நகர் பொதுக்கழிப்பிடம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரேம்குமார், குரு உள்ளிட்ட 5 பேரை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், 2013-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தின் சகோதரர் பிரேம்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள சஞ்சய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments