ஈரானில் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் சாப்பிட்ட இரு பெண்கள் கைது

0 3131

ஈரான் தலைநகர் டெஹ்ரான் உணவகத்தில், ஹிஜாப் இல்லாமல் சாப்பிட்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

டோனியா ராட் மற்றும் மற்றொரு பெண் தலையில் ஹிஜாப் இல்லாமல் சாப்பிடும் புகைப்படம் வலைத்தளங்களில் பரவியதால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் எழுத்தாளரும் கவிஞருமான மோனா பர்சாய், கால்பந்து வீரர் உசேன் மகினி, முன்னாள் அதிபர் அக்பர் ஹசாமி ரஃப்சாஜானியின் மகள், ஃபெயிசா ரஃப்சாஜானி போன்ற செல்வாக்குமிக்கவர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்த கைது நடவடிக்கை மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments