முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
பொன்னியின் செல்வன் முதல் நாளே 80 கோடி ரூபாயை வசூல் செய்து தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்துள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது....
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி வாகை சூடியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாளில் பொன்னியின் செல்வன் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை வசூலாக வாரிக்குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 27 கோடியே 86 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 5 கோடியே 93 லட்சங்களையும் , கர்நாடகாவில் 5 கோடியே 4 லட்சத்தையும், கேரளாவில் 3 கோடியே 70 லட்சங்களையும் வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வட மாநிலங்களை பொறுத்தவரை 3 கோடியே 51 லட்சங்களையும் ஓவர் சீஸ் என்று சொல்லக்கூடிய வெளி நாடுகளில் 34 கோடியே 25 லட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாகவும், முன்பதிவில் மட்டுமே 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.
முன் பதிவு செய்யப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நகரப்பகுதிகளில் உள்ள மால் திரையரங்குகளில் வருகிற 7ஆம் தேதி வரை பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments