வங்கியில் வாங்கிய கடனை கட்டாததால் சரவணபவன் ஓட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி
வங்கியில் வாங்கிய 25 கோடி ரூபாய் கடனை கட்டாததால் சரவணபவன் ஓட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி செய்யப்பட்டது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நிலத்தை வைத்து கடன் வாங்கிய ஓட்டல் நிர்வாகம் வட்டி, அசல் எதுவும் செலுத்தாததால் 40 கோடி ரூபாய் வரை நிலுவையான நிலையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ஜப்தி குறித்த அறிவிப்பு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, இன்று வந்த நீதிமன்ற ஊழியர்கள் போலீசாரின் பாதுகாப்புடன், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு சீல் வைத்தனர்.
Comments