வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பயன்பாட்டிற்கு வந்தது மத்திய அரசின் ONDC இ-காமர்ஸ் தளம்
ஆன் லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், மத்திய அரசு உருவாக்கியுள்ள ONDC எனப்படும் இ-காமர்ஸ் தளம் அதிகாரபூர்வமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ரீடெய்ல் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும் இந்த ஆன்லைன் வர்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ONDC எனப்படும் இ-காமர்ஸ் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம் சிறு ரீடைல் விற்பனையாளர்களையும், ஆன் லைன் விற்பனை தளத்திற்கு கொண்டு வரமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெங்களுருவில் அதிகார்வபூர்வமாக இந்த தளம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
Comments