வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதிக்கு பின் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதிக்கு பின் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் செப்.30 வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. அதன் படி, நேற்றுடன் தென் மேற்கு பருவமழை முடிவடைந்து, இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி வருவதால், அக்டோபர் 15ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 45% அதிக மழை பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments