உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.14.70 கோடி பணம் பறிமுதல் செய்த போலீசார்..!

0 3480

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பண்டல் பண்டலாக  கொண்டு செல்ல முயன்ற 14 கோடியே 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பிடிபட்டது.

பள்ளிகொண்டா போலீசார்  நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு சிறிய பண்டல்களை ஆட்கள் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

அவர்களிடம் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த  பண்டலை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments