புதையல் ஆசையால் நண்பனை நரபலி கொடுத்த நபர் கைது

0 3833
புதையலுக்காக நண்பரை நரபலி கொடுத்த விபரீதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதையல் ஆசையில் நண்பரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன் என்பவருக்கு நாகராஜ், சிவகுமார் என்ற இரு மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.அவரது மனைவி 4ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 28 ம் தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி குழியில் மர்மமான முறையில் லட்சுமணன் உயிரிழந்து கிடந்தார். குழியின் முன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் கோழி மற்றும் மண்வெட்டி இருந்தன.

இதுபற்றி கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருங்க மர தரிசு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரை கைது செய்தனர். விசாரணையில், லட்சுமணனும், அவரும் கடந்த காலத்தில் ஒன்றாக வேலை செய்திருப்பது தெரிய வந்தது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் லட்சுமணன் மகளுக்கு பேய் பிடித்திருந்ததால் அதனை ஓட்டுவதற்காக சிரஞ்சீவி என்ற சாமியார் வந்தார் என்பதும் அவர் பேய் ஓட்டி விட்டு செல்லும் போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப்பதாக கூறிச் சென்றதும் தெரிய வந்தது.

இந்நிலையில் பேய் பிடித்த ராணி என்பவரை நரபலி கொடுக்க முடிவு செய்த தும், ஆனால் அவர் வராததால் புதையலை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் மணி லட்சுமணனை கொலை செய்து நரபலி கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

ஆனால் புதையல் எதுவும் கிடைக்காததால் மணி அங்கிருந்து தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments