8 ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு

0 3896
8 ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு

எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2014 - 2015ஆம் ஆண்டுகளில் செல்போன் உற்பத்தியின் மதிப்பு 18 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஏரத்தாழ பூஜ்யம் என்ற நிலையில் இருந்த செல்போன் ஏற்றுமதி மதிப்பு, 27 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments