அர்மீனியாவுக்கு ரூ.2,000 கோடிக்கு ஆயுத தளவாடங்களை வழங்கும் இந்தியா
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை உள்பட இரண்டாயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை அர்மீனியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது.
அர்மீனியா - அஜர்பைஜான் இடையே எல்லை தொடர்பான மோதல் நீடித்து வரும் நிலையில், பினாகா ஏவுகணை, பீரங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் உள்பட பல ஆயுதங்களை அர்மீனியாவுக்கு இந்தியா வழங்கவுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு, சுமார் 350 கோடி மதிப்பிலான 4 சுவாதி ரேடார்களை அர்மீனியாவுக்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments