உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனைக்கு செல்லும்போது ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
இனி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனைக்கு செல்லும்போது, ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கக்கூடாது என்றும் உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை ஊடகங்களில் வெளியிட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக் செல்லும்போது விதிகளை பின்பற்றாமல், சதீஷ்குமார் விளம்பரத்திற்காக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நேரலை செய்து வருவதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.ராஜ்குமார் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு, உணவு பாதுகாப்பு துறை, சதீஷ்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Comments