கஞ்சா தொழில் செய்ய கத்துக் கொடுத்த குருவே கவுன்சிலர் கணவர் தாங்க..! காட்டிக் கொடுத்ததால் தாக்குதல்

0 3911

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையை போலீசில் காட்டிக் கொடுத்தவரின் மனைவியை, நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய பெண் கவுன்சிலரின் வீடியோ வெளியாகி உள்ளது.

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு பொன்னாடை போர்த்தியபடி நிற்கும் இவர் தான் மரூர் ராஜா. இவரது மனைவி ரம்யா திண்டிவனம் 20 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.

சம்பவத்தன்று கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் மரூர் ராஜா அகியோர் இரவு நேரத்தில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று கையை பிடித்து இழுத்து அடித்து தாக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது.

இந்த தாக்குதல் வீடியோவை பகிர்ந்த சுகன்யா பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜாவும், சுகன்யாவின் கணவர் சந்தோஷ் குமாரும் ஒன்றாக கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும், அவர்களுக்குள் கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் சந்தோஷ்குமார் தனியாக விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மரூர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி சந்தோஷ்குமாரை காவல்துறையினரிடம் சிக்கவைத்துள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா விற்பனை குறித்து சந்தோஷ்குமாரிடம் நேரடியாக விசாரித்த போது, கவுன்சிலர் ரம்யாவின் கணவர் மரூர் ராஜா தான் தனக்கு கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் சப்ளை செய்வதாகவும் , தனக்கு இந்த தொழிலை கற்றுக் கொடுத்த குருவே அவர் தான் என்றும் சந்தோஷ்குமார் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் தன்னிடம் நெருக்கமாக உள்ள உள்ளூர் காவல்துறையினர் மூலம் தெரியவந்ததால் மிரண்டு போன மரூர் ராஜா, தன்னை போலீசில் சிக்கவைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்த சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு மனைவியுடன் சென்று அங்கிருந்த சுகன்யாவை வெளியே இழுத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதல் வீடியோ ஆதாரத்தில் அடிப்படையில் மரூர் ராஜா மற்றும் கவுன்சிலர் ரம்யாவிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments