நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய அவர், 2003ஆம் ஆண்டில் சஸ்பெண்டான நிலையில்,அவரை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கர், பணி நீக்கத்திற்கான நோட்டீசை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒரு மாதத்திற்கு பார்வையாளர்களை சந்திக்க சிறை நிர்வாகம் தடை விதித்ததாகக் கூறி, காலை முதல் அவர் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
Comments