திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை அரசியலாக்க கூடாது - அமைச்சர் மூர்த்தி

0 5171

திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகன் திருமணத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், 50 ஆயிரம் பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருமண விருந்து அளித்ததாகவும் கூறினார்.

மகன் திருமணத்திற்காக தாம் 30 கோடி ரூபாய் செலவழித்ததாக கூறுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments