தலையணையால் முகத்தை அழுத்தி 2வது மனைவி கொலை: மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகம் ஆடிய கணவன் கைது

0 3082

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பத்தகராறில் இரண்டாவது மனைவியை தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்து  மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்டார். 

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர் . முதல் மனைவி வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியில் வசித்து வருவதாகவும் அவருக்கு 2மகள்கள் , ஒரு மகன் உள்ளதாக கூறப்படுகிறது.

2வது மனைவியான ஆசினா பேகத்திற்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஷாஜகான் முதல் மனைவியை நன்கு கவனித்து வந்ததாகவும், இதனால் ஆசீனா பேகம் அடிக்கடி ஷாஜகானிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28 ந் தேதி இரவு படுக்கை அறையில் ஆசீனா உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்ட அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். மகளின் உள்ளங்கை மற்றும் விரல்களில் தீக்காயம் இருப்பதால் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்து இருந்தார்.

ஆசீனாவின் உடல் மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து போலீசார் ஷாஜகானை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆசீனா தூங்கிக் கொண்டு இருந்த போது தலையணையை அவரது முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்திருப்பதும், கொலையை மறைக்க அவரது கையில் சால்டிரிங் ஸ்டிக் வைத்து ஷாக் கொடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது போல் செட்டப் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் ஷாஜகான் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments