புதிய வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
காலை 10.30 மணிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இது நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் ஆகும்.
விமானத்தில் பயணிப்பது போன்ற நவீன வசதிகள், ரயில்கள் மோதுவதைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவையும் கண்கவரும் கலைநயமும் இந்த வகை ரயில்களின் சிறப்பாகும்.
ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்துக்கு ஆறு நாட்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 16 பெட்டிகளில் 1,128 பயணிகள் இதில் பயணிக்க முடியும். மும்பை-காந்தி நகர் இடையே சூரத், வடோதரா , அகமதாபாத் ஆகிய மூன்று நிறுத்தங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும்.
520 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 6மணி நேரம் 20 நிமிடங்களில் கடக்கும்.
இதனைத் தொடர்ந்து, கலுப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தூர்தர்ஷன் கேந்திரா வரை செயல்படும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்பின் அம்பாஜி செல்லும் பிரதமர் மோடி, மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
Comments