கம்போடிய நாட்டின் தலைமை செயலகத்தில் திருவள்ளுவர் சிலை
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் நடைபெற்று வரும் உலக திருக்குறள் மாநாட்டை முன்னிட்டு சியாம் ரீப் நகரில் உள்ள தலைமை செயலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷத்தால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு கம்போடிய பாரம்பரிய முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments