இனி போலி பத்திரபதிவு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி
தமிழகத்தில் இனி போலி பத்திர பதிவுகளை மேற்கொண்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் நடத்தப்பட்ட வணிக வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, வரி ஏய்ப்பு செய்து ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வரி செலுத்த வைக்கும் நோக்கில் தான் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், யாரையும் பழி வாங்கும் நோக்கத்தில் அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.
Comments