மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை..!

0 2410

ரகசிய சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது.

அரசின் ஆலோசகராக ஆங் சான் சூகி பதவி வகித்தார். தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

5 வழக்குகளில் சூகிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments