அரசு தொழிற்பயிற்சி நிலைய மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்த 17 வயது மாணவர் கீழே விழுந்து படுகாயம்!

0 3388

சேலத்தில், ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்த  17 வயது மாணவர், 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கோகுல் என்பவர் டர்னர் பிரிவில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி மாணவர்களை, ஆசிரியர்கள் பயிற்சி நிலையத்தை சுத்தம் செய்ய கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது, பணிமனையின் மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்த கோகுல் கீழே உள்ள பயிற்சி எந்திரத்தில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments