பொன்னியின் செல்வன் என்பதை PS 1 என்று குறிப்பிடுவது சரியா ? மணிரத்னத்துக்கு வழக்கறிஞர்கள் நோட்டீஸ்..!

0 5197

பொன்னியின் செல்வன் படத்தில் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் PS-1 என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று லைக்கா மற்றும் இயக்குனர் மணிரத்னத்துக்கு கோவை வழக்கறிஞர்கள்  நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்...

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகின்றது.

சோழர்களின் பெருமை பேசும் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கிவிட்டு அதற்கு PS - 1 என்று சுருக்கி ஆங்கிலத்தில் தலைப்பிட்டு வரலாற்றுத்திரிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த சுருக்கு வடிவம் குரிசெடஸ் என்ற மதப்போரை குறிப்பிடும் வகையில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார் வழக்கறிஞர் சுந்தரவடிவேல்.

பொன்னியின் செல்வன் என்பது சோழர் காலத்து மன்னர்களையும் வீரர்களையும் குறிப்பிடக்கூடிய காவியமாக பார்க்கப்படுவதால் அப்பெயரை  பொன்னியின் செல்வன் என்றே விளம்பரங்களில்  பயன்படுத்த வேண்டும் என உரிமை கோரிக்கை நோட்டீசை லைகா தயாரிப்பு நிறுவனர் சு பாஸ்கரன் ,இயக்குனர்  மணிரத்னம் , நடிகர் விக்ரம் , ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

படப்பிடிப்பு நடத்தும் போதும், பர்ட்ஸ் லுக் வெளியிடும் போதும் அமைதியாக இருந்து விட்டு பட வெளியீட்டுக்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு பிரச்சனையை தூக்கிக் கொண்டு வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ள பொன்னியின் செல்வன் குழுவினர், இது பான் இந்தியா படம் என்பதால் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பை சுறுக்கி ஆங்கிலத்தில்  PS-1 என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments