பாகிஸ்தானில் பல் மருத்துவமனையில் சீனர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பல் மருத்துவமனையில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீனாவைச் சேர்ந்த தம்பதி நடத்தி வரும் மருத்துவமனைக்குள், நேற்று, நோயாளி போன்று உள்ளே நுழைந்த மர்ம நபர், சீனர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் அங்கு பணிபுரிந்த ரொனால்ட் ரேமண்ட் சௌ (Ronald Raymond Chou) என்ற சீனர் பலியான நிலையில், தம்பதி படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீன அரசு, தனது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது.
Comments