தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை - அரசாணை வெளியீடு

0 2412

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரிஹாப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ஜூனியர் பிரண்ட் உள்ளிட்ட 7 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் அந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்த தமிழக அரசு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments