கட்டாயத் திருமணத்தால் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்த இளம்பெண்..!

0 4091

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரால் கட்டாயத் திருமணம் செய்த இளம்பெண், கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி, ஞானமுத்து என்பவரை  காதலித்து வந்த நிலையில், 18 வயது பூர்த்தியாகாத ஜான்சி ராணிக்கு, கடந்த ஆண்டு அவரது பெற்றோர்  கிளிண்டன் என்பவரை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சி ராணி, கடந்த 18-ஆம் தேதி இரவு கணவன் வீட்டில் இருந்து சென்று, காதலனை திருமணம் செய்துகொண்டு அரகண்டநல்லூர் போலீசாரிடம் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது. 

விசாரணைக்குப் பின் ஞானமுத்துவின் தாயாருடன் ஜான்சிராணியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY