இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி நியமனம்.!
இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது. தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதையொட்டி, வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகாலம் தலைமை வழக்கறிஞராக செயல்படும் வெங்கடரமணி, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
Comments