டொனெட்ஸ்க் பிராந்தியம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரை போர் தொடரும் - ரஷ்யா அறிவிப்பு!
டொனெட்ஸ்க் பிராந்தியம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரை, உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என தெரியாமல் இருப்பதால் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே ரஷ்யா -அமெரிக்கா ஆகிய 2 நாடுகளிலும் இரட்டை குடியுரிமை வைத்திருப்போரை ராணுவத்தில் சேரும்படி ரஷ்யா அழைப்பு விடுக்க வாய்ப்பிருப்பதால், ரஷ்யாக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே சென்றுள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறும்படியும் ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
Comments