உயரழுத்த மின் கம்பியில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட நபர்.. இணையத்தில் பரவும் வீடியோ..!
உத்திர பிரதேச மாநிலம் பிலிகட் பகுதியில், ஒரு நபர் உயரழுத்த மின்கம்பிகளில் தொங்கிய படி சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று அமரியா நகர் சந்தையில் உள்ள கடையின் மேற்கூரை மீது ஏறிய நௌஷாத் என்ற நபர், உயரழுத்த மின் கம்பியை எட்டிப்பிடித்து அதில் தொங்கிய படி ஒவ்வொரு மின் கம்பியாக தாவி சாகசம் செய்துள்ளார்.
மழையின் காரணமாக அச்சமயம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அந்த நபர் உயிர் தப்பினார்.
Comments