உத்திரகாண்ட் சிறையில் 500 ரூபாய் செலுத்தினால், ஓர் இரவு விருந்தினராக தங்கலாம் என அறிவிப்பு

0 2654

ஜாதகம் சரியில்லை, சிறை செல்ல வேண்டி வருமென்று ஜோதிடர்களால் எச்சரிக்கப்படும் நபர்களுக்கு, பரிகாரமாக 500 ரூபாய் வாடகையில் ஒருநாள் இரவு மட்டும் தங்கும் வகையில் அறைகளை உத்தரகண்ட் சிறை நிர்வாகம் தயார்படுத்தி வருகிறது.

ஹல்ட்வானியில் 1903ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த சிறையில் ஊழியர்கள் தங்க 6 அறைகள் உள்ளன. அந்த அறைகளை 500 ரூபாய் வாடகைக்கு விட சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பணம் கட்டி வரும் சிறை விருந்தாளிகளுக்கு கைதிகளுக்கான உடை மற்றும் சிறை சமையலறையில் தயாரிக்கப்படும் உணவு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments