கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஊபர் ஆட்டோ டிரைவர் கைது

0 2753

சென்னை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஊபர் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.அவரது ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஞாயிறு இரவு இசிஆர் ரோட்டிலிருந்து ஓஎம்ஆரில் இருக்கும் ஹோட்டலுக்கு ஊபர் ஆட்டோவில் வந்திறங்கிய போது ஆட்டோ டிரைவர் பாலியல் தொந்தரவளித்ததாகவும், அவரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார் என்றும் கூறிய அந்த மாணவி தான், புகார் அளிக்க போலீஸ் ஸ்டேசன் சென்ற போது இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேசனில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி தனது புகாரை வாங்க  மறுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

ஆன் லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டதில் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செல்வத்தை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments