மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடிய ஈரானிய கொள்ளை கும்பல்.. குடும்பங்களுடன் தமிழகத்தில் தங்கி கைவரிசை..!
போலீஸ் என கூறி, மூதாட்டிகளிடம் நூதன முறையில் தங்க நகைகளை மோசடி செய்த ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கைது செய்து, 4 பேரை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.
அடையாறை சேர்ந்த ஸ்ரீ லதா நடந்து சென்றபோது, போலீஸ் என 3 பேர் கூறிக்கொண்டு, அப்பகுதியில் கொலை நடந்துள்ளதாகவும், எனவே நகைகளை கழற்றி பைக்குள் வைக்கும்படியும் கூறியுள்ளனர். இதை நம்பி 8 சவரன் தாலி சங்கிலி, தங்க வளையல்களை கழட்டிய அவரிடம் உதவுவது போல நடித்து நகைகளை வாங்கி கொண்டு, பேப்பரை சுருட்டி கொடுத்துவிட்டு தப்பியுள்ளனர்.
புகாரின்பேரில், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆந்திரா மாநிலம் பில்லேரு டவுனில் இம்தியாசை கைது செய்தனர்.
விசாரணையில், அவன் ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்தவன் என்பதும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொண்டு குழுக்களாக பிரிந்து திருட்டில் ஈடுபடுவதும், திண்டுக்கல்லில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கி கைவரிசை காட்டியதாகவும் தெரிவித்துள்ளான்.
Comments