ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட திருநங்கை..!

0 3413

திருச்சியில், ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி கட்டிட காண்ட்டிராக்டரை ஏமாற்றி 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக திருநங்கை பபிதா ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரான  முருகேசனிடம்  தன்னை  ஐ.பி.எஸ் அதிகாரி எனகூறிய பபிதாரோஸ் பொதுப்பணித் துறையில் கட்டிட காண்ட்ராக்ட் பெற்று தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் பெற்றதோடு, வீடு கட்டியதற்காக கொடுக்க வேண்டிய முழு பணத்தையும் கொடுக்காமல் மொத்தமாக 21 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

 திருநங்கை பபிதா ரோஸ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments