சுருக்குமடியை தடுத்த அதிகாரிகளை மறித்து ஆளுங்கட்சி பிரமுகர் ரகளை..! சவாலுக்கு சவால் விட்ட அதிகாரிகள்.!

0 3703

நெல்லை மாவட்டம் உவரி மீனவர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க சென்ற மீன்வளத்துறை அதிகாரிகளை ஆபாசமாக பேசி ஆளுங்கட்சி பிரமுகர் அடிக்க பாய்ந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது... 

நெல்லை மாவட்டம் உவரி மீனவர்கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மீனவகுடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள 20 குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுறுக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது மீனவர்கள் சுறுக்குமடி வலையை பயன்படுத்துகிறார்களா? என்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்கள் குறித்து ஆய்வு செய்ய மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார் தலைமையில் அதிகாரிகள் உவரி கிராமத்திற்கு போலீஸ் பாதுக்காப்புடன் சென்றனர். அங்கு அவர்களை வழி மறித்த திமுக பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

மீனவர் பிரச்சனையில் எப்படி தலையிடலாம் ? என்று கேட்டு அந்தோணிராய் எதிர்ப்புக்குரல் எழுப்பினார். அதற்கு வந்திருந்த அதிகாரிகள் தங்களை தாண்டி சுருக்குமடி எப்படி எடுத்துட்டு போறாங்கா பார்த்துருவோம்? என்று எதிர் சவால் விட்டனர். இதனால் உக்கிரமான அந்தோணிராய் அவர்களை நோக்கி அடிக்க பாய்ந்ததால் சலசலப்பு ஏற்பட்டது

மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு சென்ற போலீசாரோ அந்தோணிராயை சமாதானம் செய்தவாறு இருந்தனர். அவர் ஆவேசத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து சாலையில் நின்று சவால் விட்டுக் கொண்டிருந்தார்...

சுருக்குமடி பயன்படுத்தும் 20 பேரின் சுய நலத்தால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் போதிய மீன் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மீன்வளத்துறையினர் தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ((spl gfx out))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments