வணிக வளாகத்தில் கடைகள் தீப்பிடித்து எரிந்த விபத்து.. 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.!
தேனியில் வணிக வளாகம் ஒன்றில் கடைகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. தேனி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றின் அருகே அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தின் 3வது தளத்தில் இந்த விபத்து நேரிட்டது.
அங்குள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து அருகில் இருந்த கடைகளுக்கும் நெருப்பு பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கட்டுமான நிறுவன அலுவலகத்தில் பராமரிப்பின்றி இருந்த ஏசி வெடித்து தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கப்படுகிறது.
Comments