சச்சின் பைலட்டை முதல்வராக்குவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு..!
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் ராஜஸ்தான் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதால், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் ஆவாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அசோக் கெலாட் அறிவித்துள்ள சூழ்நிலையில், அவர் வகித்து வரும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ராஜஸ்தான் விவகாரம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
Comments