எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளர் கொலை வழக்கில் GAT நிதி நிறுவன பெண் ஏஜெண்ட் கைது!

0 3210

கூடுவாஞ்சேரி அருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளர் செந்தில் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஆட்களை ஏவி கொலை செய்த தனியார் நிதி நிறுவன பெண் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.

பெருமட்டுநல்லூரைச் சேர்ந்த செந்தில் குமார், GAT என்ற நிதி நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், அந்நிறுவனம் பலரிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அந்நிறுவனத்தின் ஏஜெண்டான விஜயலஷ்மியை தேடிச் சென்ற செந்தில் குமார் முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

GAT நிறுவன பண மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் செந்தில்குமார் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த விஜயலஷ்மி, கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்து விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments