குடி போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி

0 2487
குடி போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி

ஈரோடு அருகே பெற்ற தாயை கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த சகோதரர்களுக்கிடையே குடி போதையில் ஏற்பட்ட தகராறில், அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சூரம்பட்டியை சேர்ந்த சரோஜாவிற்கு திருமணமாகி விக்னேஷ் என்ற மகன் இருந்த நிலையில், அவரின் முதல் கணவர் உயிரிழந்து விட்டார். இரண்டாவதாக சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்து கொண்ட சரோஜாவிற்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார்.

விக்னேஷ் மற்றும் அருண்குமார் இருவரும் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த நிலையில், இவர்கள் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததை கண்டித்த தாய் சரோஜாவை,இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிறை சென்று, இருவரும் ஜாமீனில் வெளி வந்த நிலையில், மீண்டும் ஒன்றாக மது அருந்திய போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் அருண்குமார், விக்னேஷை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments