விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த டி.டி.எப். வாசன் நீதிமன்றத்தில் சரண்
கோவையில் விதிகளை மீறி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த டி.டி.எப். வாசன், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யூடியூபர் ஜி.பி.முத்துவுடன், தனது இரு சக்கர வாகனத்தை சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி, டி.டி.எப். வாசன் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் மீது போத்தனூர், சூலூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை அடுத்து போலீசாரால் தேடப்பட்டு வந்த டி.டி.எப். வாசன், நேற்று மதுக்கரை நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் சரணடைந்தார். இதனை அடுத்து, 2 பேர் உத்தரவாதம் கொடுத்த பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Comments