மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கி தேர்வு எழுத வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

0 9323
மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கி தேர்வு எழுத வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

ஈரோடு மாவட்டம் பவானியில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கி தேர்வு எழுத வைத்ததாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காமராஜர் நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று காலாண்டு தேர்வுக்கான, தமிழ் தேர்வு நடைபெற்றுள்ளது. மதியம் நடக்கவிருந்த தமிழ் தேர்வுக்கான வினாத்தாளை, தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி, காலையிலேயே மாணவர்களுக்கு வழங்கியதாக பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர், புகார் உறுதியானதால் தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments