யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்..!
டெல்லியில் யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய குறியான 205.33 மீட்டரை எட்டியுள்ளது.
நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் இரண்டாவது முறையாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
Comments