முதலீடு செய்த பணத்தை திருப்பி தராததால் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் - இருவர் கைது

0 2466
முதலீடு செய்த பணத்தை திருப்பி தராததால் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் - இருவர் கைது

வில்லிவாக்கம் தனியார் ஓட்டல் மேனேஜரான சீதாராமன் என்பவர் zeebul trading agency என்ற பெயரில் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டித்தருவதாக கூறி நெல்லையப்பன் மற்றும் அவரது உறவினர்களிடம் 37 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பணத்தை திருப்பிக் கொடுக்க ஒரு வருடம் கால அவகாசம் கேட்ட நிலையில் சீதாராமனை கடத்திச் சென்று பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகின்றது.

கடத்தல் தொடர்பாக நெல்லையப்பனின் உறவினர் ராமகுருனாதன், கார் ஓட்டுனர் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரை தேடிவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments