பனி சறுக்கில் ஈடுபட்டிருந்த ஹிலாரி நெல்சன் அமெரிக்க மலையேற்ற வீராங்கனை மாயம்..!
நேபாளத்தில் பனி சறுக்கில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மலையேற்ற வீராங்கனை ஹிலாரி நெல்சன் மாயமானார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மலையேற்ற வீராங்கனை ஹிலாரி நெல்சன் உலகின் 8வது உயரமான சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த பிறகு மனாஸ்லுவில் பனி சறுக்கில் ஈடுபட்டருந்தார். அப்போது திடீரென ஹிலாரி மாயமானார்.
மழை மற்றும் பனியால் தேடுதலில் பின்னடைவு ஏற்பட்டது.
இன்று விபத்துப் பகுதியை ஹெலிகாப்டரில் தேடும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மற்றும் அதை ஒட்டிய லோட்சே சிகரத்தை 24 மணி நேரத்தில் ஏறி முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் ஹிலாரி நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments