அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது செயற்கை கோளை மோதி திசைதிருப்பும் முயற்சியில் நாசா வெற்றி

0 2425
அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது செயற்கை கோளை மோதி திசைதிருப்பும் முயற்சியில் நாசா வெற்றி

பூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது செயற்கை கோளை மோதி திசைதிருப்பும் முயற்சியில் நாசா வெற்றி கண்டுள்ளது.

விண்வெளியில் சுற்றித்திரியும் விண்கற்கள் பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, அந்த விண்கற்கள் மீது விண்வெளியிலேயே மோதி திசைதிருப்பும் ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.

அதன்படி, பூமியிலிருந்து 63 லட்சம் மைல்கள் தூரத்தில் சுற்றித்திரியும், ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிதான டிமார்ஃபாஸ் என்ற விண்கல்லை குறிவைத்து ராக்கெட் மூலம் டார்ட் செயற்கைகோளை நாசா விண்ணில் செலுத்தியது.

திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்ற டார்ட் செயற்கைகோள் இன்று அதிகாலை டிமார்ஃபாஸ் விண்கல்லின் நடுப்பகுதியில் கச்சிதமாக மோதியது. இதன்மூலம் அந்த விண்கல் திசைதிரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார்ட் செயற்கைகோள் விண்கல்லின் மீது வெற்றிகரமாக மோதியதும் நாசா விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments