மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி போலீஸில் சரண்

0 2752
மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி போலீஸில் சரண்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தில் குடும்ப தகராறில் கணவனை கொன்ற மனைவி போலீஸில் சரண் அடைந்தார்.

உரியூர் கிராமத்தைச் சேர்ந்த சீராளன், குடிபோதையில் அடிக்கடி மனைவி ஷோபனாவுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு வழக்கம்போல் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சீராளன், ஷோபனாவை தாக்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த ஷோபனா, கணவன் தலையில் கல்லை போட்டு கடப்பரையால் தாக்கியுள்ளார். இதில் சீராளன் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் திருவள்ளுர், மப்பேடு காவல் நிலையத்தில் ஷோபனா சரண் அடைந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments