தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 3120
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments