தோப்புக் காவலாளியான முதியவரின் வீட்டுக்கு தீவைப்பு - போலீசார் விசாரணை..!

0 2403

பழனி அருகே தென்னந்தோப்பில் வேலை பார்த்து வந்த காவலாளியின் வீட்டுக்கு தீவைத்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

பாலசமுத்திரத்தில் முருகன் என்பவரின் தென்னந்தோப்பிலேயே தங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக 80 வயதான முதியவர் செல்லமுத்து தனது மனைவியுடன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

அங்கிருந்து வெளியேறும்படி முருகனின் மனைவி அவரை வற்புறுத்திய நிலையில் செல்லமுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தோப்பிற்கு வந்த மர்ம நபர்கள் செல்லமுத்துவையும் அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.

காயமடைந்த செல்லமுத்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments